Monday, 10 September 2018

மரணம் நோக்குவது மட்டுமல்ல வாழ்க்கை

மரணம் நோக்குவது மட்டுமல்ல வாழ்க்கை
    ஒரு ஊரின் சட்டத்தின் படி பொது மக்கள் யார் வேண்டுமானாலும் ராஜவாகலாம்.ஆனால் ஒரு நிபந்தனை,அந்த ராஜாவால் ஓர் ஆண்டு மட்டுமே ராஜாவாக இருக்க முடியும்.அவரின் பதவி காலம் முடிந்த பின் வனவிலங்குகள் வாழும் தீவு ஒன்றில் விடப்படுவர்.
        இவ்வாறான சட்டத்தால் மக்கள் யாரும் ராஜாவாக விரும்புவது இல்லை. பெரும்பாலும் வயது முதிர்த்தவர்கள் மட்டுமே இந்த பதவியில் இருப்பார்கள்.        ஒரு முறை ஒரு வாலிபர் ஒருவர் ராஜாவாக விருப்பம் தெரிவித்தார். மக்கள் அனைவரும் ஆச்சரியமும் கவலையும் பட்டனர்.என்ன இந்த பையன் விபரம் அறியாமல் பேசுவதாக சிலர் கூறினர்.ஆனால் அந்த வாலிபர் அதை பற்றி கவலைபடாமல் ராஜாவாக ஒப்பு கொண்டார்.                                            அதன் படி ராஜாவாக ஓர் ஆண்டு நிறைவு செய்தார் .தனது பதவி காலத்தின் இறுதி நாளில்,அவர் அந்த தீவுக்கு செல்ல படகில் ஏறி அமர்ந்து கொண்டார்.அதன் பின் அந்த படகோட்டியிடம் "இதென்ன ராஜா செல்லும் படகா நன்கு அலங்காரம் செய்து கொண்டு வா" என்றார்.                                      அதன் படி அலங்கரித்த படகில் ஏறி அமர்ந்து சென்று கொண்டிருந்த போது அந்த படகோட்டி அந்த ராஜாவிடம் கூறினார்"நான் இதுவரை பனிரெண்டு பேரை நான் அந்த வனவிலங்கு தீவில் கொண்டு விட்டுரிக்கிறேன் ஆனால் நீங்கள் மட்டும் சிரித்து கொண்டு சந்தோசமாக வருகிறீர்கள்லே ,உங்களுக்கு உயிர் போவதை பற்றி கவலை இல்லாமல் வருகிரிர்கலே ஏன்?"
என்று கேட்டார்
       அதற்கு ராஜா கூறிய பதில்"நான் பதவி ஏற்ற முதல் நாளிலிலே எனது சிப்பாய்களை அந்த தீவுக்கு அனுப்பி அங்குள்ள வன விலங்குகளை கொன்று அங்கு விவசாயம் செய்ய எதுவாக தயார் செய்து மனிதர்கள் வாழும் பகுதியாக மாற்றி விட்டு அந்த தீவுக்கு நான் ராஜாவாக சென்றுகொண்டு இருப்பதால்,நான் மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருக்கிறேன் "என்றார்
     மரணம் மட்டும் வாழ்க்கை என்று நினைக்காமல் தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டதால் அவர் மீண்டும் ராஜா வானர்

No comments:

Post a Comment